Monday, July 6, 2015

ஈரல் மிளகு வறுவல்













தேவையான பொருட்கள்:

ஈரல் - 1/4 கிலோ

மிளகுத்தூள் - 1 sp

சோம்புத்தூள்- 1 sp

மிளகாய்த்தூள் - 1 sp




    ஈரலை மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். ஈரல் வெந்து தண்ணீர் சுண்டியதும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
     வாணலில் கறிவேப்பிலை, சோம்புத்தூள் தாளித்து ஈரலை நன்கு பிரட்டி இறக்கவும்.




Tuesday, June 30, 2015

பூண்டு சட்னி




தேவையான பொருட்கள்:

பூண்டு - 6 பல்
கா. மிளகாய் - 4
தக்காளி - 2


  • தக்காளியை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
  • முதலில் பூண்டு, கா. மிளகாய் அரைக்கவும். 
  • பின்பு வதக்கிய தக்காளி, உப்பு சேர்த்து அரைக்கவும். 
  • கடுகு, உ.பருப்பு, க.இலை தாளிக்கவும்.

பூண்டு காரத்துடன் இருக்கும் அருமையான சட்னி இது. கோதுமை தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

கத்திரிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 kg
சி. வெங்காயம் - 10

வறுத்து பொடிக்க:

கா. மிளகாய் - 5
தனியா - 1 sp
உ. பருப்பு - 1 sp
கடலை பருப்பு - 1 sp


  • வாணலில்  எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாயை வறுத்து பொடியாக்கவும்.
  • வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ. பருப்பு, க. இலை தாளித்து, வெங்காயம், கத்திரிக்காய் இரண்டையும் சிறியதாக நறுக்கி சேர்க்கவும்.
  • மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • வடித்த சாதத்தில் வதக்கிய கலவையையும், பொடியையும் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.



Saturday, June 27, 2015

பிரண்டை துவையல்





தேவையான பொருட்கள்:

பிரண்டை - 1 கப்
கா. மிளகாய் - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு










  • பிரண்டையை நார் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக ஆக்கவும்.
  • வாணலில் 1 sp நல்லெண்ணெய் விட்டு பிரண்டையை வதக்கவும்.
  • ஆறியதும், புளி, கா. மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

பிரண்டையை ஒடித்து நாரை சுத்தமாக நீக்க வேண்டும். எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் இந்த பிரண்டை துவையல்.


Wednesday, June 24, 2015

மாங்காய் பச்சடி





இனிப்பு , காரம், புளிப்பு என பல  சுவைகள் சேர்ந்திருக்கும் இந்த பச்சடியை அப்படியே சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1
கா. மிளகாய் - 2
வெல்லம்- 1 கப்


   


  • மாங்காயின் தோலை நீக்கி விட்டு துருவிக்கொள்ளவும்.
  • வாணலில் 1 sp எண்ணெய் ஊற்றி கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • கா. மிளகாயை இரண்டாக கிள்ளி போடவும்.
  • துருவிய மாங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • மாங்காய் வெந்தவுடன் வெல்லத்தை துருவி சேர்க்கவும்.
  • கெட்டியாக வந்தவுடன் இறக்கவும்.


To remove the impurities in jaggery, it can be slightly boiled with water and filtered.



Saturday, June 20, 2015

புளிச்சக்கீரை தொக்கு




புளிச்சக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. உடல் வலிமை பெரும். சென்னையில் நாட்டு புளிச்சக்கீரை,  சிகப்பு புளிச்சக்கீரை என இரண்டு வகை கீரை கிடைக்கும். சிகப்பு புளிச்சக்கீரை அதிக புளிப்பாக இருக்கும். நாட்டு புளிச்சக்கீரை மிக ருசியாக இருக்கும்.



தேவையான பொருட்கள்:

புளிச்சக்கீரை - 1 கட்டு
கா. மிளகாய் - 1௦
பூண்டு- 3
தனியா - 1 sp

   







  • கீரையை அலசி ஒரு துணியில் நிழலில் காய வைக்கவும். 
  • பூண்டை சிறியதாக நறுக்கவும். 
  • வாணலில் 1 sp நல்லெண்ணெய் விட்டு கீரையை வதக்கவும் (5 Mins).    
  • Mixie - ல் மிளகாயை பொடித்து, வதக்கிய கீரையையும் சேர்த்து அரைக்கவும்.(No water, Not like a paste.)

  
  • வாணலில் 2 sp நல்லெண்ணெய் விட்டு  கடுகு, உ. பருப்பு, தனியா தாளித்து பூண்டை வதக்கவும். பின்பு அரைத்த கீரையையும் உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

This is our family's favorite recipe.You can use it for more than a week. I tastes good for rice, as a side dish for curd rice.






Friday, June 19, 2015

ABOUT THIS PAGE

Almost everyone believes that their mother is the best cook. I too think the same about my mother. I rarely cooked before marriage. After marriage I used to call my mother and ask her the recipes and every time i write it down in a paper or a diary and keep it some where and couldnt find it the next time and i always try to maintain a seperate cook book, and could only try, Just a step forward, i started this blog to digitalize the recipes in my cook book, so that it will benefit me as well as others.

This blog will have simple and easy to do south indian recipes as I always prefer to cook recipes that are tastier with simple procedures, less time  and that uses less ingredients.


I LOVE  TO EAT, so I started to LOVE COOKING.......